வருகிற 25ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த சமயம் கோயில்களுக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் தினசரி பூஜை கோயில்களில் வழக்கம்போல நடைபெறும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று முகூர்த்த தினம் என்பதால் அன்று கோயில்களில் திருமணம் நடத்த எந்த தடையும் இல்லை. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோயில்களில் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்த திருமணங்களை திட்டமிட்டப்படி நடத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு திருமண நிகழ்ச்சியிலும் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். அவர்கள் கோயில்களுக்கு சென்று வழிபட, பூஜையில் பங்கேற்க அனுமதி இல்லை என்று ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது.