தேறுவாரா மமதா?

மேற்கு வங்கத்தில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க பல தடாலடி நாடகங்களை நடத்தி வருகிறது. சமீபத்தில்கூட பா.ஜ.கவினர் தன்னை தள்ளிவிட்டதாக நாடகமாடினார் மமதா. ஆனால் அது அஜாக்கிரதையால் அவராகவே ஏற்படுத்திக்கொண்ட விபத்து என காவல்துறையும் தேர்தல் ஆணையமும் விளக்கமளித்துள்ளது. இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் அவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி, மமதாவின் வேட்பு மனுவை நிராகரிக்குமாறு தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர், ‘மமதா பானர்ஜி மீது அசாம் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஐந்து குற்ற வழக்குகள் மற்றும் மேற்கு வங்கத்தில், சி.பி.ஐ பதிவு செய்த வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளன. இந்த ஆறு வழக்குகள் குறித்து மமதா வேட்பு மனுவில் குறிப்பிடாமல் மறைத்துவிட்டார். எனவே, அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’ என தெரிவித்தார்.