மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய பயங்கரவாத வன்முறை நடைபெற்ற இடங்களை பார்வையிட ஆளுநர் ஜகதீப் தன்கர் கோரியிருந்தார். அதற்கு ஆளும் மமதா அரசு அனுமதியளிக்கவில்லை. இதனையடுத்து அனுமதி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தான் அங்கு செல்லவிருப்பதாக ஆளுநர் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மமதா, இது விதிமுறைகளுக்கு புறம்பானது, கள ஆய்வு முடிவுகளை எடுப்பதையோ, அதிகாரிகளுக்கு நேரடி உத்தரவுகள் பிறப்பிப்பதையோ ஆளுநர் செய்யக்கூடாது என கடிதம் எழுதியுள்ளார். மமதாவின் இந்த போக்குக்கு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் இல்லையா, பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட ஆளுநரை அனுமதிக்காதது ஏன், ஆட்சி அதிகாரம் இருந்தும் ஏன் திருணமூல் கட்சியினர் பயப்படுகின்றனர்? என கேள்வி எழுப்பியுள்ளார்.