கொல்கத்தாவில் சகோதரி நிவேதிதை பெண் குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் நடத்திவந்தார். அங்கே ஒரு வகுப்பறையில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் படம் ஒன்று சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அதற்கு மேல்புறமாக மாணவியருக்கு பாடம் நடத்த உலகப் படம் ஒன்று இருந்தது. உலகப்படம் மேலே, ராமகிருஷ்ண பரமஹம்சரின் படம் கீழே. நிவேதிதை பார்த்தார். பரமஹம்சரின் படத்தை எடுத்து மேலே மாட்டினார். இப்போது உலகப் படம் கீழே.
மாணவியரிடம் “எப்போதும் பாரதமே உலகின் தலைவனாக இருக்க வேண்டும்” என்று எடுத்துச் சொன்னார். பாரதம் முழு சுதந்திரம் பெற்று பாரத சமுதாயத்தில் தர்மம் உறுதியாக நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. அதற்காகவே அவர் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்..
யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா எழுதி விஜயபாரதத்தில் தொடராக வெளிவந்து சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்ட ’நிவேதிதை நூற்றைம்பது’ நூலிலிருந்து…