ஒடிசாவில் உள்ள கேந்திரபாரா என்ற ஊருக்கு அருகிலுள்ள ‘லூத்தரன் மஹிலா சமிதி’ என்ற கிறிஸ்தவ குழந்தை பராமரிப்பு மற்றும் முதியோர் இல்லம் உள்ளது. இங்கு தங்கியிருந்த 35 வயது வீட்டு வேலை செய்யும் சற்றே மனநலம் குன்றிய பெண்ணை 60 வயதான கிறிஸ்தவ பாதிரி குஞ்சாபிஹாரி தாஸ் பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவருடன் இணைந்து இந்த அமைப்பை நடத்தி வரும் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் பிரமிலா திரிபாதியின் சகோதரர், ஜெகந்நாத் திரிபாதியும் பல ஆண்டுகளாக அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை விசாரித்த ஒடிசா மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் (ஓ.எஸ்.சி.பி.சி.ஆர்) தலைவர் சந்தியாபதி பிரதான் இந்த சம்பவம் வெட்கக்கேடானது, துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டார். விசாரணைக்குப் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து, பாதிரி குஞ்சாபிஹாரி மற்றும் ஜெகந்நாத் திரிபாதியும் கைது செய்யப்பட்டனர். இந்த கிறிஸ்தவ சபையில் இது போன்ற முறைகேடுகள் நடப்பது இது முதல்முறை அல்ல. இந்த பெண் ஏற்கனவே பெற்றெடுத்த குழந்தைகளை 2016 மற்றும் 2018ல் சட்டவிரோதமாக இத்தாலி தம்பதிகளுக்கு விற்றுள்ளனர் இவர்கள். இது குறித்து விசாரித்த அவரது கணவர் மிரட்டப்பட்டார் என்பதும் அவர் மீது தற்போது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.