தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ஹனம்கொண்டாவில் அசார் என்ற முஸ்லிம் நபர் 23 வயது பெண்ணான அனுஷாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடினார். அந்த பெண் அசாருடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு பழகினார். ஆனால், அசாரின் நடவடிக்கைகள் பிடிக்காததால், ஒரு வருடம் கழித்து உறவை முறித்துக் கொண்டார். கடந்த சில மாதங்களாக அசார் அந்த பெண்ணை பலவழிகளில் துன்புறுத்தினான். எனினும், அந்த பெண் அசாரை நிராகரித்தார். இதையடுத்து, அனுஷாவின் வீட்டிற்கு சென்ற அசார், அவரின் கழுத்தை கத்தியால் அறுத்தான். அனுஷாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அந்த பெண் எம்.ஜி.எம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த தாக்குதலுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் அந்த பெண்ணுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.