உத்தரபிரதேச சட்டப்பேரவையில் ‘உத்தரப்பிரதேச சட்டவிரோத மதமாற்ற மசோதா 2021’ கடந்த புதன்கிழமை நிறைவேறியது. இனி அங்கு மதமாற்றம் செய்ய விரும்புவோர், மதமாற்றம் செய்யப்படும் நபர், யாருடைய மேற்பார்வையில் மதமாற்றம் நடக்கிறது போன்ற விவரங்களுடன் மாவட்ட நீதிபதியிடம் முறையான அனுமதி பெறவேண்டும். தவறுவோருக்கு, அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். பட்டியலினப் பழங்குடிகள், குழந்தைகள், பெண்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வோருக்கு கடுமையான அபராதமும் சிறைத்தண்டனையும் உண்டு. முன்னதாக கடந்த நவம்பரில் இதனை எதிர்த்து சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினர். ஆனால், நீதிமன்றம், சட்டத்தை நிறுத்திவைக்க மறுத்துவிட்டது.