குடித்துக் குடித்து உடம்பைக் கெடுத்துக் கொண்ட எண்ணற்ற தமிழகக் குடிமகன் களுக்கு ஒரு நல்ல செய்தி எனச் சொல்லலாம் போல ஒரு தகவல்:
தான், கல்லீரைக் காப்பாற்றும் ஒரு மருந்தைக் கண்டுபிடித்து அதைப் பேடன்ட் செய்திருக்கிறார் உத்தரகாண்ட் மாநிலம், நைனிதால் மாவட்டம், ராம்நகர் வாசியான விமல்குமார். ஆர்.எஸ்.எஸ் தொண்டரான இவர் சொல்வதைக் கேட்போம்:
“என் பாட்டி கல்லீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளை வீட்டிலேயே தங்கவைத்து கை வைத்தியமாக இலவச சிகிச்சை செய்து வந்தார். இது 1974 வரை நடைபெற்றது. நிறைய பேர் 10, 15 நாட்களிலேயே குணமடைந்து வீடு திரும்பினார்கள். பாட்டி காலமான பிறகு நான்கு ஆண்டுகள் வரை என் தாயார் அந்த சிகிச்சை சேவையை செய்து வந்தார். 1977ல் என் தாயார் காலமானார். அதையடுத்து அதே சிகிச்சை முறையைக் கையாண்டு லிவர் பாதிப்புக்கு நான் சிகிச்சை அளித்து வருகிறேன்”.
விமல்குமார் தன் மகனுடன் சேர்ந்து இந்த மருந்தைத் தொழில் முறையில் உற்பத்தி செய்து பரவலாக நோயாளிகளுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியை 2006ல் தொடங்கினார்.
இதற்கான மருந்து உரிமம் (டிரக் லைசன்ஸ்) பெற்றார். அப்போது சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழக விஞ்ஞானி டாக்டர் சரவணபாபு சிதம்பரத்தை சந்தித்தார். அவருடன் இணைந்து இந்த மருந்தை மேலும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். பரிசோதனையில் வெற்றி பெற்றதால் இவரது காப்புரிமை விண்ணப்பம் 2017ல் ஏற்கப்பட்டது. 2021 ஜனவரி 11 அன்று ‘ஸாவ்லிவ் டிராப்ஸ்’ (SAVLIV DROPS) என்ற பெயர் கொண்ட இவரது மருந்து காப்புரிமை பெற்றது. கல்லீரல் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் நம்பிக்கை இழந்துபோய் தவிக்கும் நோயாளிகளுக்கு ஆயுர்வேத முறைப்படி இந்த மருந்தைக் கொடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய நோக்கம் எனக் கூறுகிறார் விமல் குமார். கல்லீரல் பாதிப்பு தொடக்க நிலையில் உள்ளவர்களுககு இது நல்ல குணம் தரும்’’ என்கிறார் இவர். ‘‘இந்த மருந்தின் மூலப்பொருள் ராஜஸ் தானில் மட்டுமே கிடைக்கிற ஒரு செடி. எங்கள் பாட்டி ‘‘சமேலி தேவிக்கு ராஜஸ்தான் மக்களுடன் நல்ல தொடர்பு இருந்ததால் அந்தச் செடியின் மருத்துவக் குணம் தெரியவந்தது’’ என்கிறார்.
பசி இல்லாமல் போவது, வயிற்றில் நீர்க்கட்டு (ஜலோதரம்), ஹெப்படைட்டிஸ் காமா முதலிய பாதிப்புகளுக்கு இவர் தரும் மருந்தால் நல்ல குணம் கிடைப்பது தெரிய வந்துள்ளது. பக்க விளைவு எதுவும் இல்லை என்பது நல்ல செய்தி. பிணியாளர் எவரும் இவரை அணுகி மருந்து வாங்கிக் கொள்ளலாம். தற்போது ஆன்லைனில் மட்டும்தான் மருந்து அனுப்புகிறார். ‘‘கடைகளில் கொடுத்து மருந்து விற்பனை செய்தால் இடைத்தரகர்கள் பிரச்சினை வருகிறது’’ என சுட்டிக்காட்டுகிறார். சாமானியராகத் தோற்றமளிக்கும் விமல் குமார், ஆயுர்வேதத்தின் பிணி தீர்க்கும் வல்லமையை நிரூபித்திருக்கிறார்.
(ஆதாரம் : தினேஷ் மான்சேரா 2021 பிப்ரவரி 21 பாஞ்சஜன்ய இதழில் எழுதிய கட்டுரை) தமிழில் : பெரியசாமி