வருகின்ற மே ஒன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு சுமார் 60 நாட்கள் வரை நாம் ரத்ததானம் செய்ய முடியாது. இதனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ரத்த வங்கிகளில் ரத்த சேமிப்பில் பெரிய தட்டுப்பாடு ஏற்படலாம். எனவே, 18 வயது நிரம்பியோர் அனைவரும் தயவுசெய்து முன்கூட்டியே திட்டமிடுங்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முன் ஒருமுறை ரத்த தானம் செய்திடுங்கள். பல உயிர்களை காத்திடுங்கள்.