சேகர் குப்தா என்பவரின் ‘தி பிரிண்ட்’ என்ற இணைய ஊடகம் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. கல் தடுக்கி கீழே ஒருவர் விழுந்தால் கூட அது மோடி அரசின் அலட்சியப் போக்கினால்தான் என கூறும் ஒரு இடதுசாரி பத்திரிகை அது. அதில் காண்டிரிபியூட் எடிட்டராக வேலை செய்பவர் ஷிவம் விஜ். இவருடன் கல்லூரியில் படித்தவர் ஒருவர் நெடுநாள் வியாதிகளுடன் அவதிப்பட்டு வந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் காலமாகி விட்டார். உடனே, கொரோனா பெருந்தொற்றினால் தனது கல்லூரித் தோழி காலமாகி விட்டதாகவும் அவர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாததற்கு 45 வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கு தடுப்பூசியை மறுத்த மோடியே காரணம் என்றும் விஷத்தை கக்கியிருக்கிறார் இந்த ஷிவம் விஜ். இவரின் இந்த கூற்றை இறந்தவரது நெருங்கிய உறவினர் மறுத்துள்ளார். அவர் தனது நாள்பட்ட வியாதிகளின் காரணமாகவே இறந்தார் என்றும் கோவிட் தொற்றால் இறக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.