பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பிரெஞ்சுக்கார்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் புரட்சி வெடித்துள்ளதால் பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் நாட்டு குடிமக்கள், நிறுவனங்கள் தற்காலிகமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பாகிஸ்தானில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சுக்கார்களுக்கு எதிரான போராட்டத்தின் போது கலவரக்காரர்களை கண்ணீர் புகை குண்டு வீசியும், ரப்பர் புல்லட்களால் சுட்டும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர், இதில் வன்முறைக்காரர்களால் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது, முகமது நபியின் மதிப்பை பாதுகாப்பதில் நாங்கள் ஆதரவாக இருக்கிறோம், ஆனால் போராட்டக்காரர்கள் வைத்த கோரிக்கை, பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத தேசமாக சர்வதேச சமூகத்தின் முன் காட்டுகிறது என்றார்.