கொச்சியில் தயாராகி வரும் 45,000 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல், மும்பையில் உருவாக்கப்படும் 7,500 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் நாசகாரி கப்பல் மற்றும் விசாகப்பட்டினத்தில் தயாரிக்கப்பட்டு வரும் 6,000 டன் எடையுள்ள ஐ.என்.எஸ். அரிகாட் அணு ஆயுத அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை விரைவில் இந்திய கடற்படையில் இணைய உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை மூன்றுமே நமது இந்திய கடற்படையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தின் அதிநவீன முக்கிய பகுதிகள். இதன்மூலம் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் நமது இந்திய கடற்படையின் வலிமை பன்மடங்கு அதிகரிக்கும்.