‘நீட் தேர்வையும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும் எதிர்த்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தி.மு.க கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படும். தேர்தலில் ஆட்சி மாற்றம் வந்தால், நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கை பாதிப்புகளில் இருந்து, தமிழக மாணவர்களை பாதுகாக்க முடியும்’ என கூறி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிதன் அரைவேக்காட்டு மேதாவிதனத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2013 மே 5ல் காங்கிரஸ், தி.மு.க கூட்டணியினர்தான் நீட் தேர்வை அறிவித்தனர். இதில் தமிழில் எழுத அனுமதிக்கப்படவில்லை என்பதும், 2017 பா.ஜ.க அரசு நீட்டை தமிழில் எழுதலாம் என அறிவித்தது. இதேபோல 1976ல் எமெர்ஜென்சியின் போது. 42ஆம் சட்டத்திருத்தத்தை பயன்படுத்தி பள்ளிக் கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது காங்கிரஸின் இந்திராகாந்திதான். தேசியக் கல்விகொள்கை புதிதாகக் கொண்டு வரப்பட்டது அல்ல. இது காங்கிரஸ் ஆட்சியிலேயே முன் வைக்கப்பட்டதுதான். என்றாலும் இது கடந்த 6 ஆண்டுகள் நாடு முழுவதும் பல தரப்பினரோடும் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகே தற்போது செயல் வடிவம் பெற்றுள்ளது. இது போன்ற எந்த விவரமும் அறியாமல் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி வருகிறார் கே.எஸ் அழகிரி.