பாரத விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ‘பிரதமர் கிசான் திட்டம்’ செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் என மூன்று தவணையாக ரூ. 6,000 வழங்கப்படுகிறது. இந்தப் பணம், இடைத்தரகர்கள், அரசியல்வாதிகள் என யாரின் குறுக்கீடும் இன்றி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. விவசாயிகள் இதனால் பலனடைந்து வருகின்றனர். அவ்வகையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான எட்டாவது தவணை நிதியாக சுமார் 20,000 கோடி ரூபாயை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக விடுவித்துள்ளார். இந்த பண பரிமாற்றம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது. இதனால், 9.5 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்கள் பலன் பெருகின்றன.