பஞ்சாப் பொற்கோயிலில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடந்ததை நினைவுகூறும் விதமாக, கடந்த ஜூன் 6, காலிஸ்தான் தினமாக, காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் அதன் ஆதரவாளர்களால் அனுசரிக்கப்பட்டது.
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்:
அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை ஒடுக்க, அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி உத்தரவின் பேரில் பாரத ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையான ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் ஜூன் 1 முதல் ஜூன் 8, 1984 வரை நீடித்தது. இதில், 83 ராணுவ வீரர்கள் 492 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு பழிவாங்கும் வகையில்தான் இந்திரா காந்தி அவரது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து காங்கிரசாரால் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சீக்கிய எதிர்ப்பு கலவரத்தில் சுமார் 8.000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
கிரிக்கெட் வீரர்:
காலிஸ்தான் தினத்தை முன்னிட்டு, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தனது இஸ்டாகிராமில், காலிஸ்தானிய பயங்கரவாதி பிந்த்ரான்வாலேவை தியாகி என பாரட்டியதோடு மரியாதையும் செலுத்தியுள்ளார். இது அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொற்கோயில்:
இந்த நிகழ்வையொட்டி, பொற்கோயிலில், ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் பிபி ஜாகிர் கவுர்,ஹர் பிரித் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், பயங்கரவாதி பிந்த்ரான்வாலின் மகன், அவரது குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டனர். அங்கு ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷங்களும் எழுப்பப்பட்டன.
சந்தர்ப்பவாத கூட்டணி:
தங்கள் இனத்தை கொன்றதாக பஞ்சாபியரும் காலிஸ்தானிகளும் கருதும் கங்கிரசாருடன்தான் தற்போது அவர்கள் கூட்டணி வைத்துள்ளனர். பஞ்சாப்பை காங்கிரஸ் கட்சிதான் தற்போது ஆட்சி செய்து வருகிறது. குருநானக் யாரை எதிர்த்து சீக்கிய மதத்தை நிறுவினாரோ அவர்களுடனேயே இணைந்துதான் காலிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர். இவையனைத்தும், அவர்களுக்கு கொள்கை என்பது இல்லை என்பதையும் அவர்களது அப்பட்டமான சந்தர்ப்பவாத கூட்டணியையுமே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
மங்கும் புகழ்:
வீரத்திற்கு பெயர் பெற்ற சீக்கியர்கள், தற்போது போதைக்கு அடிமையாவது, வன்முறைகளில் ஈடுபடுவது எல்லாம் காலிஸ்தான், முஸ்லிம் பயங்கரவாத கூட்டணியால்தான். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளின் ஆதரவுடன் இதே காலிஸ்தான் வன்முறையாளர்கள்தான் விவசாய சட்ட எதிர்ப்பு எனும் பெயரில் குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் வன்முறை நிகழ்த்தினர். தேசியக்கொடியை அவமானப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.