டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால், ‘சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு, அந்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த உருமாறிய வைரஸ், குழந்தைகளுக்க ஆபத்தை ஏற்படுத்தும். அந்த வைரஸ், இந்தியாவுக்குள் வந்தால், மிகப்பெரிய ஆபத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சிங்கப்பூருக்கான விமான போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். இந்தியாவில்இருந்து சிங்கப்பூருக்கு எந்த விமானமும் செல்லக்கூடாது. அங்கிருந்தும் விமானங்கள் வராமலும் தவிர்க்க வேண்டும்’ எனகூறினார். ஆனால், இதனை சிங்கப்பூர் அரசு மறுத்து உள்ளது. இது தொடர்பாக இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ‘சிங்கப்பூரில் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் உள்ளதாக கூறப்படுவது உண்மையில்லை’ என தெரிவித்துள்ளது.