டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் எங்களுக்கு தினமும் 976 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால். இதற்காக தினமும் மத்திய அரசை குற்றம் சாட்டி அறிக்கைகள் வெளியிட்டு வந்தார். பின்னர் 700 டன் ஆக்ஸிஜன் கேட்டார். நீதிமன்றத்தில் மத்திய அரசு 730 டன் ஆக்ஸிஜன் வழங்குவதாக அறிக்கை அளித்தது. இதனால் பின்வாங்கினார் டெல்லி முதல்வர். முன்னதாக, ஆக்ஸிஜன் பயன்பாட்டை தணிக்கை செய்ய பலமுறை வலியுறுத்தியது மத்திய அரசு. ஆனால் அதனை வேண்டுமென்றே செயல்படுத்தாமல் இருந்தார் கெஜ்ரிவால். மற்றொரு பக்கம் அவரது கட்சி எம்.எல்.ஏ இம்ரான் உசேன், ஆக்ஸிஜனை திருடி கள்ளச் சந்தையில் விற்பதாக ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் ஆக்ஸிஜன் பயன்பாட்டை தணிக்கை செய்ய உத்தரவிட்டதால் வேறு வழியின்றி, தங்களுக்கு ஆக்ஸிஜன் தேவை இப்போது ஒரு நாளைக்கு 582 மெட்ரிக் டன்னாக குறைந்துவிட்ட்து என தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால். டெல்லியின் ஒதுக்கீடு மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.