சஞ்சிவனி சாரதா கேந்திரா என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் நவ்ரே (புத்தாண்டு) விழாவின் நிறைவு நாள் விழாவில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் இணை பொதுச் செயலாளரன தத்தாத்ரேயா ஹோசாபலே, ‘காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ நீக்கம் வரலாற்றில் ஒரு திருப்புமுனை. முஸ்லிம் பயங்கரவாத வன்முறை காரணமாக வீட்டையும் சொந்த மண்ணையும் விட்டு அகதிகள் போல வெளியேறிய காஷ்மீர் ஹிந்துக்களின் மறுவாழ்வை உறுதி செய்வது தற்போதைய முதல் வேலை. பல தசாப்தங்களுக்கு முன் காஷ்மீரில் முஸ்லிம் பயங்கரவாதம் காரணமாக தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேறிய காஷ்மீரின் ஹிந்து சமூகம், மீண்டும் தனது மண்ணுக்குத் திரும்பி, கண்ணியத்துடன் மறுவாழ்வு பெறவேண்டும் என்று ஒரு உறுதிமொழியை நாம் எடுத்துக் கொள்வோம். அந்த மத வெறியர்களிடம் மதம் மாறி சரணடைய மறுத்த காஷ்மீரி ஹிந்துக்களின் வாழ்க்கை போராட்டங்கள் நாட்டிற்கு ஒரு முன்னுதாரணம். பெரும் பாதிப்புக்குள்ளான அனைத்து காஷ்மீர் ஹிந்துக்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். ராணா பிரதாப் சிங், சிவாஜி மகராஜ் போன்ற மிகப்பெரிய தலைவர்களின் லட்சியம் நமக்கெல்லாம் உத்வேகம் அளித்துள்ளன’ என்றார். மேலும் சீக்கிய குருக்களான தேஜ் பகதூர், கோவிந்த் சிங் ஆகியோர் முகலாய அரசர்களால் நிர்பந்திக்கப்பட்ட போதும் எவ்வாறு காஷ்மீர் ஹிந்துக்களுக்கு உதவினர் என்பதை என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.