நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக சட்டசபை தேர்தலுக்கான தனது கூட்டணியில் தீவிர இஸ்லாமிய அமைப்பான எஸ்.டி.பி.ஐயுடன் கூட்டணி வைத்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற பயங்கரவாத ஆதரவு அமைப்பான பி.எப்.ஐயின் அரசியல் முகம்தான் இந்த எஸ்.டி.பி.ஐ கட்சி. சமீபத்தில் பெங்களூருவில் பட்டியலினத்தை சேர்ந்த, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச மூர்த்தியின் மருமகன் முகநூலில் ஒரு செய்தி பதிவிட்டார் என்பதற்காக அவரது வீடு, காவல் நிலையம், காவல்துறை வாகனங்கள் உட்பட ஏராளமான பொதுமக்களின் வாகனங்களை தீ வைத்து எரித்து, ஒரு சில மணி நேரத்தில் பல நூறு கோடிகள் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்கள் இவர்கள்தான். சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் வெடிகுண்டு, துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பி.எப்.ஐயின் ஆட்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லி வன்முறை கலவரத்தில் கூட பி.எப்.ஐயின் கைகள் இருப்பதை டெல்லி காவல்துறை ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியுள்ளது. இதைத்தவிர ஹத்ராஸ் வழக்கு, கேரளாவில் பல வழக்குகள் என இவர்கள் மீதான வன்முறை பட்டியலின் நீளம் மிக அதிகம். அனைத்திற்கும் மேலாக, கமலின் விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் அவருக்கு மிரட்டல் விடுத்தவர்களே இக்கட்சினர்தான். இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருந்தும் கமல் இவர்களுடன் கூட்டணி வைப்பது அவரின் அதிகாரப் பசியையே காட்டுகிறது.