‘நம் நாட்டின் ஏதோ ஒரு மூலையில், யாரோ ஒரு தனி நபர், ஒரு சிலரால் தாக்கப்பட்டால்கூட, இங்கு விவாதம் நடத்தக்கூடிய தமிழக காட்சி ஊடகங்கள், மேற்கு வங்க வன்முறைகளையும் அராஜகங்களையும் பகிரங்கப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த நியாயமற்ற மவுனம், நமது மனசாட்சியை உலுக்குகிறது. மேற்கு வங்கத்தில் திருணமூல் காங்கிரஸால், கட்டவிழ்த்து விடப்படும் கொடுரங்களுக்கு, ஊடகத் துறையைச் சேர்ந்த நாம் அனைவரும் நமது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவற்றுக்கெதிராக கேள்வி கேட்கவும், உண்மையை வெளிக்கொணரும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. ஆனால் இந்த வன்முறை செயல்களை தமிழக அச்சு, காட்சி ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து வருகின்றன. இது வருத்தத்திற்குரியது’ என மேற்குவங்காளத்தில் ஆளுங்கட்சியான மம்தா பானர்ஜியின் திருணமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் வன்முறையை பற்றிய செய்திகளை தமிழக மக்கள் பார்வைக்கு எட்ட விடாமல் இருட்டடிப்பு செய்யும் தமிழக ஊடகங்களிடம் நியாயம் கேட்டு இருபதுக்கும் மேற்பட்ட மூத்த பத்திரிக்கையாளர்கள், இணைய வழி செய்தி நிறுவனங்கள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.