எம்.பிக்கு ஜிஹாதிகள் கொலை மிரட்டல்

பா.ஜ.கவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக ஒரு பதிவை வெளியிட்டதற்காக, கடந்த மாதம் முஸ்லிம் பயங்கரவாதிகளால் ராஜஸ்தானின் உதய்பூரில் தலையை வெட்டி படுகொலை செய்யப்பட்டார் அப்பாவி ஹிந்து தையல்காரர் கன்னையா லால். அவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பா.ஜ.க எம்.பி கிரோரி லால் மீனா, கன்னையா லால் குடும்பத்திற்கு தனது ஒருமாத சம்பளத்தை வழங்குவதாக அறிவித்தார். இதையடுத்து, கிரோரி லால் மீனாவுக்கு முஸ்லிம் அடிப்படைவாதிகள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு கிரோரி லால் மீனா எழுதிய கடிதங்களில், காதிர் அலி என்பவன் எழுதிய கொலை மிரட்டல் கடிதம் தனது டெல்லி இல்லத்திற்கு அனுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது டுவிட்டர் பதிவில், “காதிர் அலி என்ற ஜிகாதிக்கு இது பிடிக்கவில்லை. உதய்பூரில் ஜிஹாதிகளால் கொல்லப்பட்ட கன்னையா லாலின் குடும்பத்திற்கு நான் ஒரு மாத சம்பளத்தை அளிப்பதாக கூறியதால் அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபோன்ற மிரட்டல்களுக்கு நான் பயப்பட மாட்டேன். இந்த ஜிஹாதிகளையும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல் சக்திகளையும் நான் தொடர்ந்து அம்பலப்படுத்துவேன். இந்த காரணத்திற்காக நான் இறக்கவும் தயார்” என கூறியுள்ளார்.