உத்தர பிரதேசத்தில் வரும் 2022ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறும் முயற்சியாக, உ.பியின் உருது கவிஞராக இருந்து அரசியல்வாதியாக மாறிய முகமது இம்ரான் கான் என்ற இம்ரான் ‘பிரதாப்கரி’ என்பவரை தற்போது அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவராக சோனியா காந்தி நியமித்துள்ளார். இவர், 2019ல் காங்கிரசில் இணைந்தார். பிரியங்கா காந்திக்கு நெருக்கமானவர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சமாஜ்வாதி கட்சியின் எஸ்.டி.ஹசனிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதாப்கரி 2019ல் வெளியிட்ட வீடியோவில், நீங்கள் இறப்பதற்கு முன் குறைந்தது 4 முதல் 6 பேரைக் கொல்லுங்கள் என முஸ்லிம்களை தூண்டிவிட்டுள்ளார். இவரது பேச்சுக்கள் அனைத்துமே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து முஸ்லிம்களும் ஜிகாதில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கும் விதமாகவே உள்ளது. இப்படி மதக் கலவரங்களைத் தூண்டும் ஒருவரை, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவராக சோனியா நியமித்துள்ளது காங்கிரஸ் கட்சியினர் உட்பட பலரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.