‘ஜெட் சூட்’ எனப்படும் பறக்கும் கருவியை முதுகில் கட்டிக் கொண்டு அதிலுள்ள குட்டி ‘ஜெட்’ இயந்திரத்தை இயக்கி ஒரு மனிதரை வானில் பறக்க முடியும் என வெறும் விஞ்ஞானக் கற்பனையாக இருந்தது தற்போது ராணுவ பயன்பாட்டுக்கு கொண்டுவரலமா என்று தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், ஜெட் சூட்டை தயாரிக்கும் ‘கிராவிட்டி இண்டஸ்டிரீஸ்’ அண்மையில் பிரிட்டனின் ராயல் கப்பற்படையினருக்கு அதை சோதித்துக் காட்டியுள்ளது. ஒரு வீரர், கிராவிட்டி ஜெட் சூட்டை முதுகில் கட்டிக்கொண்டு சிறிய படகிலிருந்து பறந்து சென்று பெரிய கப்பல் ஒன்றில் போய் இறங்குகிறார். இந்தக் காணொலி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இனி வருங்காலத்தில், பிரிட்டன் உட்பட பல நாடுகளும் ஜெட் சூட் படைப்பிரிவை துவங்கக்கூடும்.