இந்திய மருத்துவ கழகமான ஐ.எம்.ஏவின் தலைவர் டாக்டர் ஜே.ஏ. ஜெயலால் மருத்துவர்களையும் நோயாளிகளையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற மருத்துவமனைகளைப் பயன்படுத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஹக்காய் இன்டர்நேஷனலில் அவர் அளித்த ஒரு நேர்காணலில், தான் பெற்ற இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் பதவியை கிறிஸ்தவ சுவிசேஷத்தை பரப்பவும், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் நோயாளிகளை மதம் மாற்றவும் பயன்படுத்த விரும்புவதை வெளிப்படுத்தினார். கடந்த காலத்தில் தொழுநோய், காலரா மற்றும் பிற தொற்று நோய்களிலிருந்து உலகை நவீன மருத்துவர்கள் விடுவித்தனர். அது மதமாற்றத்திற்கான சூழலை உருவாக்கியது. அதேபோல தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று மக்களை மதமாற்றம் செய்ய ஏற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஏசுவின் பரிசு, அதனை நான் வரவேற்கிறேன் என தெரிவித்தார். மேலும், மத்திய அரசு ஆயுர்வேதத்தையும் சமஸ்கிருதத்தையும் கொண்டு நவீன மருத்துவத்தை அழிக்க விரும்புகிறது என பொய்யாக ஒரு குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.