இத்தாலியர் கைது

நேபாளத்தில் இருந்து சட்டவிரோதமாக எந்த ஆவணமும் இன்றி பாரதத்தில் நுழைய முயன்ற இத்தாலி, ரோம் நகரைச் சேர்ந்த மேட்டியோ டி ரோசா என்பவர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பாரத நேபாள எல்லையில் சட்டவிரோதமாக நுழைந்தபோது சீமா சுரக்ஷா பாலின் (SSB) ரோந்து குழுவினரால் இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணைக்காக உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் 2017 முதல் நேபாளத்தில் தங்கியிருந்தார். 2017 முதல் 2021 வரை எட்டு முறை இத்தாலியில் இருந்து  நேபாளத்திற்குச் சென்றுள்ளார். பாரதம் வர அவருக்கு விசா கிடைக்காததால், எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்றார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.