கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், வென்டிலேட்டர், ஆக்சிஜன் செறிவூட்டிகளின் தேவை அதிகரித்துள்ளது. பொதுவாக இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றின் விலை சுமார் ரூ.5 லட்சம். இந்நிலையில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிறுவனம் குறைந்த விலையில், பிராணா, வாயு, ஸ்வாஸ்தா என்ற பெயரில் மூன்று வகை வென்டிலேட்டர்களை சர்வதேச தரத்தில் வடிவமைத்துள்ளது.இந்த வென்டிலேட்டர்களின் விலை ஒரு லட்சம் ரூபாயாக இருக்கும். மேலும், குறைந்தவிலை ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் தயாரித்துள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்குள் புதிய வென்டிலேட்டர், ஆக்சிஜன் செறிவூட்டிகளின் உற்பத்தி வர்த்தகரீதியாக துவங்கும்.