சமீபத்தில் பி.பி.சி உருது தொலைகாட்சி ஒரு யூடியூப்பில் வீடியோவை வெளியிட்டது. அதில், பாகிஸ்தானிய பள்ளிப் பாடப்புத்தகங்களில் பரவியிருக்கும் ஹிந்து விரோத பிரச்சாரத்தை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அங்குள்ள சிறுபான்மை ஹிந்து மாணவர்கள் தங்கள் நண்பர்கள், வகுப்பு தோழர்களால் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றனர் என்பதையும் அந்த வீடியோ விவரிக்கிறது. பிரபல பாகிஸ்தான் கல்வியாளர் ஏ.எச். நயார், ‘பாகிஸ்தான் அரசு பாடப்புத்தகங்களில் முஸ்லிம் குழந்தைகள், ஹிந்துக்களை வெறுக்க மூளைச்சலவை செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில், ‘ஹிந்துக்கள் அரக்கர்கள், காபிர்கள், பாகிஸ்தானுக்கு ஏற்படும் அனைத்து தீமைகளுக்கும் அவர்களே பொறுப்பு, அவர்கள் மனிதகுலத்தின் எதிரிகள், ஹிந்துக்களும் சீக்கியர்களும் ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள், குழந்தைகளை கொன்றுள்ளனர், பாகிஸ்தானில் உள்ள ஹிந்து சிறுபான்மையினர் பாரதத்திற்கு விசுவாசமாக உள்ளனர், அவர்கள் துரோகிகள்’ என பாகிஸ்தான் அரசு பள்ளி பாடப்புத்தகங்கள் பொய்கதைகளை மாணவர்களிடம் பரப்புகிறது. ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பாகிஸ்தான் புத்தகங்களில் நுட்பமான முறையில் அமைந்துள்ளது. பாகிஸ்தானின் வரலாறு கற்பிக்கப்படும் போது, முஸ்லீம் லீக்கிற்கும் காங்கிரசுக்கும் இடையிலான அரசியல் பிரச்சனையை முஸ்லிம்களுக்கும் ஹிந்துக்களுக்கும் இடையிலான சண்டையாக சித்தரிக்கப்படுகிறது. பாகிஸ்தான் பாடப்புத்தகங்களில் முஸ்லீம் ஆட்சியின் வரலாறு மட்டுமே முன்வைக்கப்படுகிறது. பாரதத் துணைக் கண்டத்தின் வரலாறு முஸ்லிம்களின் வருகையுடன்தான் தொடங்குகிறது. ஆனால், அதற்கு முன் பாரதத்தை மிகச் சிறப்பாக ஆண்ட ஹிந்து அரசர்கள் குறித்த வரலாறு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை’ என்கிறார்.