பிரபல ஹாலிவுட் நடிகர் ரியான் ரெனால்ட்ஸ், தனது இந்திய ரசிகர்களுக்காக ஒரு வீடியோ செய்தியை அனுப்பியுள்ளார். அதில் சில பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் அவர் நடித்த ஃப்ரீ கை ஆகிய படங்களை ஒப்பிட்டு பேசியுள்ளார். அப்போது அவர், “ஹாலிவுட் இப்போது பாலிவுட்டைப் பிரதிபலிக்கிறது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், என்னுடைய பதில் ஆம், எங்களுக்கு வெட்கமில்லை. வெட்கமே இல்லை” என்று கூறியுள்ளார்.