மேற்கு வங்கத்தில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மமதா போட்டியிடுகிறார். அவரை ஜெயிக்க வைக்க ஏதுவாக காங்கிரஸ் கட்சி, தனது வேட்பாளரை நிறுத்துவதில்லை என முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில், மமதா பானர்ஜியின் திருணமூல் காங்கிரஸ் கட்சியை ஜெயிக்க வைப்பதற்காக, காங்கிரஸ் கட்சி வேண்டும் என்றே சரியாக பிரச்சாரம் செய்யவில்லை, ராகுல் உட்பட அனைத்துத் தலைவர்களும் பிரச்சாரம் செய்யாமல் ஒதுங்கிவிட்டனர், எங்களை கைகழுவிவிட்டனர், இதனால் ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் ஜெயிக்கவில்லை, தொண்டர்கள் விரக்தி அடைந்துவிட்டனர், தற்போது மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் காணாமல் போய்கொண்டிருக்கிறது என மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்களும், அவர்களது கூட்டணியினரும் புலம்பினர் என்பது நினைவு கூரத்தக்கது.