ஈரான் அணுசக்தி துறையின் முக்கிய அதிகாரியான அப்பாஸ் அராக்சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு யூரேனியத்தை செறிவூட்ட போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் ‘நாங்கள் தற்போது, நதான்ஸ் நிலத்தடி அணு உலையில் யுரேனியத்தை 60 சதவீதம் அளவிற்கு செறிவூட்டல் செய்திருக்கிறோம். தற்போது ஒரு மணி நேரத்திற்கு ஒன்பது கிராம் எனும் அளவுக்கு செறிவூட்டப்பட்ட உரேனியம் கிடைத்துக் கொண்டிருக்கிறது’ என அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபா அறிவித்துள்ளார். இது ஈரானிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச அளவு என்பது குறிப்பிடத்தக்கது. அணு ஆயுதங்கள் தயாரிக்க 90 சதவீதம் சுத்தமான யுரேனியம் தேவை. எனினும் இந்த 60 சதவீதம் என்பதும் ஆபத்தானதுதான். 90 சதவீதம் சுத்திகரிக்க அவர்களிடம் நவீன உபகரணங்கள் இல்லை எனினும் பிற்காலத்தில் வேறு எதாவது ஒரு வழியில் இதனை அவர்கள் 90 சதவீதம் எனும் அளவிற்கு சுத்திகரித்தால் அது ஆபத்தானதாக மாறும் என சர்வதேச நிபுனர்கல் கருத்து தெரிவித்துள்ளனர். தனது நாட்டுக்கெதிரான பொருளாதாரத்தடை, தனது அணு விஞ்ஞானிகள், ராணுவ தலைவர்கள் மீதான தொடர் தாக்குதல், சமீபத்தில் இஸ்ரேல் செய்ததாக ஈரானால் குற்றம் சாட்டப்படும் அணு உலை மின்தடை போன்றவைகளால் உலகையே அச்சுறுத்தும் இது போன்ற விபரீத முயர்சிகளில் ஈரான் ஈடுபட்டு வருகிறது.