வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தில் உள்ள பாறையில் முதலாம் பராந்தக சோழர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. 1078 ஆண்டுகளுக்கு முன்பு, சாத்தனூர் ஏரி பராமரிப்புக்காக ‘காடிவாய் நாழி நெல்’ குறித்து கல்வெட்டு வாசகங்கள் கூறுகின்றன. ‘ஒரு களம் நெல் விளைந்தால், ஒரு நாழி நெல் வீதம் ஏரி பராமரிப்புக்கு வரியாக கொடுக்க வேண்டும்’ என்பது அதன் பொருள். மேலும், ‘இந்த தர்மத்தை ரட்சித்தவர்களின் திருப்பாதம் என் தலைமேல். இத்தர்மத்தை இறக்குபவர்கள் கங்கையிடை, குமரியிடை, எழுநூற்று காதம் இடையே செய்பவர்கள் பாவத்தில் போகக் கடவர்கள்’ என எழுதப்பட்டுள்ளது.