பிரபல பத்திரிகையாளர் ரோஹித் சர்தானா கடந்த வெள்ளியன்று மரனமடைந்தார். அவரது மறைவு பத்திரிகை உலகிற்கு ஒரு பேரிழப்பு. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல தலைவர்களும் பத்திரிகை சமூகமும் இரங்கலைத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நியூஸ் லாண்டரி கட்டுரையாளரும் டெல்லி கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருமான ஷர்ஜீல் உஸ்மானி என்பவர், ரோஹித் சர்தானாவை ‘ஒரு பொய்யர், இனப்படுகொலை செய்பவர்’ என்று மிகத்தவறாக சித்தரித்ததுடன் அவர், ஒரு பத்திரிகையாளராக நினைவுகூரப்படமாட்டார் என்று தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். ரோஹித் சர்தானாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ராஜ்தீப் சர்தேசாயையும் அதற்காக கண்டித்துள்ளார்தார் ஷர்ஜீல் உஸ்மானி. எனினும் ராஜ்தீப் தனது இரங்கலை பதிவு செய்திருந்தார். மேலும் பல சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உஸ்மானியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.