உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த, டி.எம்.எஸ்.ஆர்.டி.இ நிறுவனம், உள்நாட்டு மூலப் பொருட்களைக் கொண்டு நவீன தொழில்நுட்பத்தில், குண்டு துளைக்காத உடையை வடிவமைத்து, தயாரித்துள்ளது. பஞ்சாப், சண்டிகரில் உள்ள ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் இந்த உடை சோதித்து பார்க்கப்பட்டு இந்த உடையின் குண்டு தாங்கும் திறன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. வழக்கமான குண்டு துளைக்காத உடை, 10 கிலோவிற்கும் அதிகமாக எடை கொண்டுள்ள நிலையில், இந்த புதிய, உடை, 9 கிலோ எடை மட்டுமே கொண்டுள்ளது என்பதால், ராணுவ வீரர்களுக்கு இது வசதியாக இருக்கும். விரைவில் இந்த உடை, இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.