பாரத ரஷ்ய இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த ரஷ்யா வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ‘பாரதத்திற்கு 5.2 பில்லியன் டாலர் மதிப்பில் எஸ் – 400 விமான பாதுகாப்பு அமைப்பு வழங்குவதற்கான ஒப்பந்தம் சரியான திசையில் செல்கிறது. இதில் எவ்வித தடங்கலும் இல்லை. அமெரிக்க தடைகள் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து இரண்டு நாடுகளும் விவாதித்து வருகின்றன. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாரதத்தில் ரஷ்ய ராணுவ உபகரணங்கள் உற்பத்தி குறித்தும் விவாதிக்கபட்டது. இருதரப்பு கலந்துரையாடலில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரஷ்ய ஜனாதிபதி புதினின் வருடாந்திர உச்சிமாநாட்டிற்கான இந்திய வருகை, இருதரப்பு ஒத்துழைப்பு, அணு, விண்வெளி மற்றும் நீண்டகால பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது என கூறினார். அப்போது பாரத வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உடனிருந்தார்.