குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்ற பாரதத்தின் முதலாவது, உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு மாநாட்டில் முக்கிய ஆயுஷ் பிரிவுகளான, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், மருத்துவ மதிப்பு பயணம், மருந்து பொருட்கள், தொழில்நுட்பம், நோய் கண்டறிதல் மற்றும் மருந்து பொருள் விவசாய வேளாண்மை உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் ரூ. 9,000 கோடிக்கும் மேல் மதிப்புள்ள முதலீட்டு உத்தரவாத கடிதம் பெறப்பட்டு ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள், ஆயுஷ் துறையை உலகளவில் பிரபலப்படுத்தும் வகையில், பரஸ்பர ஆராய்ச்சி மற்றும் நிதி பரிசீலனைகளுக்கு வழிவகுக்கும். முன்னதாக, தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.