மேம்படுத்தப்பட்ட பயிற்சி விமானம்

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹால்) நிறுவனம் மேம்படுத்தியுள்ள HTT-40 வகை அடிப்படை பயிற்சி விமானத்தின் கடைசி கட்ட மேம்பாடு தொடர்பான சோதனைகளை வெற்றிகரமாக சோதனை விமானிகளைக் கொண்டு நடத்தி முடித்துள்ளது. தற்போது இது ஆபரேசன் கிளியரன்சிற்கு தயாராக உள்ளதாக ஹால் கூறியுள்ளது. குறைந்த அளவு தொடர் தயாரிப்பிற்கு தேவையான அனைத்து மேம்பாட்டு தொடர்பான சோதனைகளும் ஏற்கனவே முடிவடைந்துள்ளது. எனவே அடுத்த வருடத்தில் இருந்து குறைந்த அளவு தொடர் தயாரிப்பிற்கு விமானம் உட்படுத்தப்பட உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 2012ல் நடைபெற்ற ஊழல் காரணமாக ஸ்விஸ் தயாரிப்பு பிளாட்டஸ் விமானங்கள் வாங்குவதை நிறுத்தியது மத்திய அரசு. அதன் பிறகு ஹால் நிறுவனத்தின் HTT-40 விமான மேம்பாட்டிற்கு பாதுகாப்பு அமைச்சகம் முழு ஆதரவு அளித்தது. 106 அடிப்படை பயிற்சி விமானங்கள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டது. விரைவில் இந்த விமானத்தை உபயோகிப்பாளர் சோதனையாக பாரத விமானப்படை நேரடி சோதனை செய்ய உள்ளது.