கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், இந்த வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்களை வெளியிடுவேன். எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் 164வது பிரிவின் கீழ் எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த பிறகு, இந்த வழக்கு குறித்து மேலும் தெரியவரும். எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறியுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் எம். சிவசங்கர் தன்னை சுரண்டியதாகவும், சூழ்ச்சி செய்ததாகவும் ஸ்வப்னா சுரேஷ் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், சிவசங்கர் எழுதி வெளியாகவுள்ள அவரின் சுயசரிதையான “அஸ்வத்தமாவு: வெரும் ஒரு ஆனா” புத்தகத்தில், ஸ்வப்னா தனக்கு ஐபோன் பரிசளித்து சிக்க வைத்ததாகவும், தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவர் தங்கக் கடத்தல் மோசடியின் மூளையாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்தே ஸ்வப்னா சுரேஷ் இந்த கருத்தைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.