தி.மு.கவின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம்தான் மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜியின் திருணமூல் கட்சிக்கும் அரசியல் ஆலோசகர். இவரது நிறுவனம் நடத்திய ஒரு கருத்து கணிப்பில், மமதா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் அவர் தோல்வியை தழுவுவார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி வெற்றி பெறுவார் என தெரியவந்துள்ளது. மேலும் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மொத்தமுள்ள 30 இடங்களில் 23 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இணைய தளங்களில் கசிந்துள்ளது. இதனால் மமதாவும் ஐ-பேக் குழுவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை போலி அறிக்கை என குற்றம்சாட்டியுள்ள மமதா, நந்திகிராமில் தான் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு நந்திகிராமிலேயே முகாமிட்டுள்ளார்.