காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் ஹைபிரிட் பயங்கரவாதிகள் எனும் ஒரு புதிய சவாலை எதிர்கொண்டு வருகின்றனர். பகுதி நேர பயங்கரவாதிகளாக செயல்படும் இந்த ஸ்லீப்பர் செல்கள், தங்கள் தலைமையிடம் இருந்து கட்டளைகள் வரும்வரை தனது அன்றாட தொழிலை செய்து வருவார்கள். யாருக்கும் சந்தேகம் ஏற்படாது. கட்டளைகள் வந்தவுடன், இவர்கள் தங்கள் பயங்கரவாத செயலை செய்துவிட்டு மீண்டும் தங்களது வழக்கமான வேலைகளில் ஈடுபடுவார்கள். இதனால் இவர்களை கண்டறிவது கடினம். சமீபத்தில் நடைபெற்ற பல தாக்குதல்கள் இந்த வகையை சேர்ந்தவையே. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ வழிகாட்டுதலின்படி காஷ்மீரில் இவ்வகையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் இதனையும் நாங்கள் வெற்றிகரமாக முறியடிப்போம்’ என காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.