பாகிஸ்தானில் பெய்து வரும் பருவகால மழை பாதிப்புகளால் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், சாலைகளும், பாலங்களும் துண்டிக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த நாட்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பலுசிஸ்தானின் கச்சி மாவட்டத்தில் ஜலால் கான் என்ற கிராமம் வெள்ள பெருக்கினால் மாகாணத்தின் மற்ர பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், மனிதநேயம் மற்றும் மதநல்லிணக்க அடிப்படையில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு, அங்கு சிறுபான்மையினராக உள்ள ஹிந்து சமூகத்தினர், பாபா மதுதாஸ் கோயில் கதவுகளை திறந்து விட்டுள்ளனர் என டான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதே பாகிஸ்தானில்தான் ஹிந்துக்களுக்கு அங்கு பெரும்பான்மையினராக உள்ள முஸ்லிம்கள் கொடுமைகளை இழைத்து வருகின்றனர். இந்த மழை வெள்ளத்தின்போது, அங்கு பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு முகாம்களில் இடம் தர மறுப்பது, உணவு, மருத்துவ வசதிகளை அளிக்க மறுப்பது உள்ளிட்ட கொடுமைகளையும் அரங்கேற்றி வருகின்றனர்.