திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் அருகே அமைந்துள்ள திருச்செந்துறை கிராமம் முழுவதுமே வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்றும் நிலத்தை விற்க அதனிடம் சென்ற தடையில்லா சான்றிதழை பெற வேண்டும் என்றும் சார் பதிவாளர் கூறியது பெரும் சர்ச்சையை ஏர்படுத்தியது. அங்குள்ள 1,500 வருட பழமையான கோயில், அதன் நிலங்களும்கூட வக்பு வாரியத்துக்கு சொந்தமா என கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு அந்த கிராமம் மட்டுமல்ல, தமிழகமெங்கிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ.க, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் அறிவித்தன. இந்த சூழலில், அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டு உள்ளதாக பா.ஜ.க மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா செய்தி பதிவிட்டுள்ளார். “வெற்றி வெற்றி. ஹிந்துக்களின் ஒன்றுபட்ட குரலுக்கு வெற்றி. திருச்செந்துறை கிராமமே வக்பு சொத்து, அங்கு வக்பு போர்டின் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பத்திரம் பதிய முடியாது என்கிற ஹிந்து விரோத ஆணை வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதற்கு ஆண்டவனுக்கு நன்றி கூற சந்திரசேகர ஸ்வாமிக்கு தீபாராதனை” என்று பதிவிட்டுள்ளார். மேலும், “திருவெறும்பூர், தொண்டாமுத்தூர் பகுதிகளிலும் கிராமங்கள் முழுவதுமாக வக்பு வாரியத்துக்கு சொந்தம் என்று அறிவித்துள்ளதாக என் பதிவில் சிலர் பின்னூட்டம் செய்துள்ளனர். அவைகளை ஆதாரங்களுடன் கொண்டு வாருங்கள் நம் போராட்டம் தமிழகம் முழுவதற்கும் தான். ஹிந்து ஒன்றுபட்டால் 30 நாட்களில் முழு தீர்வு” எனவும் கூறியுள்ளார்.