சென்னை, மேடவாக்கம் பகுதி பெரும்பாக்கம் மலையில் உள்ள சிவலிங்கத்தை கிறித்தவ வனத்துறை அதிகாரி ஒருவர் அராஜகமாக உடைத்து வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இதனை அறிந்த ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், உடனடியாக வனத்துறை அலுவலகத்திற்கு சென்று ‘சிவலிங்கத்தை திரும்ப தரும்வரை இங்கிருந்து செல்ல மாட்டோம்’ என்று கூறி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அந்த பகுதியை சேர்ந்த காவல் ஆய்வாளர் இதில் தலையிட்டு சிவலிங்கத்தை அந்த கிறித்தவ வனத்துறை அதிகாரியிடமிருந்து பெற்றுத் தந்தார். சிவலிங்கத்தை திரும்ப பெற்ற பொது மக்கள் மீண்டும் அந்த சிவலிங்கத்தை அதே மலை மீது பிரதிஷ்டை செய்து வணங்கினர். ஹிந்துக்கள் ஒன்று பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.