கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் மனு அளித்தனர். அதில், ‘கோவை போன்ற பெருநகரங்களில், பல இடங்களில் ஆடு மாடுகளை பொது இடத்தில் வெட்டுவது அதிகரித்து வருகிறது . விலங்கினங்களை துன்புறுத்துவதற்கு பல கட்டுப்பாடுகள் இருக்கின்றபோது, மக்கள் அதிகமாக பயணம் செய்யும் செல்வபுரம் ஆத்துப்பாலம், போத்தனூர் போன்ற பகுதிகளில் குர்பானி கொடுக்கும் நிகழ்ச்சியை சிலர் நடத்துகின்றனர். இது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதுடன் பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது. கொரோனா தொற்று பரவிவரும் சூழலில், இது போன்று பொது இடத்தில் கால்நடைகள் வெட்டப்படுவது நோயை அதிகரிக்கும். அதற்கென இறைச்சி கூடம் என்ற இடம் உள்ளது . எனவே அந்த இடங்களிலே அதை வெட்ட வேண்டும். எனவே குர்பாணி போன்ற நிகழ்ச்சிக்கும் பொது இடத்தில் ஆடு, மாடுகள், ஒட்டகம் வெட்டப்படுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தடைவிதிக்க வேண்டும்’ என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.