‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை மீறி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கியும் 9.9 கோடி வசூலித்துள்ளது‘ என மும்பை ஐ.ஐ.டி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நான்கு பணப்பரிமாற்றங்களுக்கு மேல் ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ. 17.70 வசூல், நெப்ட், யு.பி.ஐ, இம்ப்ஸ் உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிமற்றத்திற்கு ரூ. 17.70 கட்டணம், குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க தேவையில்லாத அடிப்படை வங்கி கணக்குகளுக்கு குறிப்பிட்ட சேவைகளுக்காக அதிகக் கட்டணம் என எஸ்.பி.ஐ உட்பட பல அரசுடமை வங்கிகள் வசூலித்துள்ளன. இதேபோன்ற முறைகேட்டை செய்து பல தனியார் வங்கிகளும் செய்து பொதுமக்களிடம் அதிக நிதிவசூல் செய்துள்ளன என மும்பை ஐ.ஐ.டியின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.