ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்) நிறுவனத்திற்கு சுமார் 21,000 கோடி ருபாய் வருவாய் வந்துள்ளது என அந்த நிறுவனம் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 41 ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் விற்பனை, 102 என்ஜின்கள், 198 விமானங்கள் மற்றும் 506 என்ஜின்களின் பராமரிப்பு மூலமாக இந்த வருவாய் ஈட்டுப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருவாயில் பெரும் பங்கு பாரத விமானப்படை வாயிலாக கிடைக்க பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.