வளரும் பொருளாதாரம்

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில், ‘கடந்த 2020-21ம் நிதியாண்டின், அக்டோபர் முதம் மார்ச் வரையிலான இரண்டாவது அரையாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வளர்ச்சி அடைந்தது. ஆனால் அது, கொரோனா 2வது அலையால், இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாதிக்கப்பட்டது. தற்போது, கொரோனா வேகம் தணிந்து வருவதால் பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்கத் துவங்கியுள்ளன. வாராக் கடன்கள் சதவீதம் அதிகரிக்கவில்லை. தகவல் திருட்டு, கணினி மோசடி போன்றவை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளன. உலக அளவிலான விலை உயர்வு, பணவீக்கம், சர்வதேச நிதிச் சந்தையில் நிலையற்ற தன்மை போன்றவை நம் வளர்ச்சிக்கு தடைக் கற்களாக உள்ளன. அரசின் ஸ்திரமான கொள்கை, மூலதன உயர்வு நடவடிக்கை, நிதி நிறுவனங்களிடம் பணப்புழக்கத்தை அதிகரித்தல் போன்றவற்றின் வாயிலாக பொருளாதார வளர்ச்சிக்கான சவாலை சமாளிக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.