உலகளவில் கரியமில வாயுக்கள் வெளியேற்றும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் பாரதம் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் சீனாவும் அமெரிக்காவும் உள்ளன. நிலக்கரியால் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்கள் இதில் முன்னிலை வகிக்கின்றன. 2060ல் சீனாவும் 2050ல் அமெரிக்காவும் பசுமை இல்ல வாயுக்களை பூஜ்ஜியமாக்க உறுதி கூறியுள்ளன. இந்த ஆண்டு ஸ்காட்லாந்து, கிளாஸ்கோவில் உலக பருவநிலை தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில் 2047ல் பருவநிலை மாற்றங்களுக்கு வித்திடும் இந்த பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்க, பாரதம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.