ஜி.பி.எஸ் டோல்

பாஸ்டேக் அமல்படுத்தப்பட்ட பிறகு தற்போது 97 சதவீத வாகனங்கள் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தி வருகின்றன. 7 சதவீதம் பேர் இன்னும் டோல்கேட்டில் ,பணத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த ஆண்டு பிப்ரவரி 16 முதல், வாகனங்கள் பாஸ்டேக்கைப் பயன்படுத்தாவிட்டால் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இது நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு, டோல்கேட்டில் நடந்த முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. சுங்கவரி சரியாக கணக்கிடப்படுகிறது. இதனால் அரசுக்கு வருமானம் அதிகரித்தது. இந்நிலையில், இன்னும் ஒரு வருடத்தில் டோல்கேட் இல்லாத நடைமுறை தேசம் முழுவதும் நடைமுறைப் படுத்தப்படும் என  சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். மேலும், டோல்கேட்டில் இனி ஆட்களுக்கு பதிலாக, ஜி.பி.எஸ் இமேஜிங் (வாகனங்கள்) அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக பழைய வாகனங்களில்கூட ஜி.பி.எஸ் கருவியை நிறுவப்படுவதற்கான வழிகள், திட்டங்களை அரசு ஆராய்கிறது என கட்கரி தெரிவித்துள்ளார்.