கூகுள் பயிற்சி மையம்

மைசூரு பல்கலைக்கழகத்தில், கூகுள் நிறுவனத்தின் சார்பில், புதிதாக ‘கிளவுட் கம்ப்யூட்டிங் பயிற்சி’ மையம் துவக்கப்பட்டுள்ளது. மைசூரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சியை அளிப்பதற்கு மைசூர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கூகுள் நிறுவனம் கிளவுட் கம்ப்யூட்டிங் பயிற்சி மையத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி பட்டப்படிப்பை முடித்து வெளியே செல்லும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கு பயனுள்ளதாக அமையும் என கூறப்பட்டுள்ளது.