சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து பறந்து சென்ற 14 தேஜாஸ் போர் விமானங்களின் கம்பீரமான அணிவகுப்புப் புகைப்படத்தை இந்திய விமானப்படை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. கடந்த சில ஆண்டுகளில் தேஜாஸ் பல்வேறு விமான சாகச நிகழ்ச்சிகள், கண்காட்சிகளில் பங்கேற்றிருந்தாலும், ஒரு டஜனுக்கும் அதிகமான விமானங்களை ஒருசேர பயன்படுத்துவது இது முதல்முறை என கருதப்படுகிறது.
இது பயிற்சி அணிவகுப்பா, பாதுகாப்பு ஒத்திகையா என சரியாகத் தெரியவில்லை. இந்த வருட தொடக்கத்தில் ரூ. 48,000 கோடியில் 83 தேஜஸ் விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு விமானப்படை ஒப்பந்தம் வழங்கியுள்ளது. வரும் ஆண்டுகளில் இந்திய விமானப்படை 100 க்கும் மேற்பட்ட தேஜாஸ் விமானங்களை படிப்படியாக பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.